×

அணைக்கட்டு அருகே புலிமேடு மலையடிவாரத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியை காண குவிந்த மக்கள்

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே புலிமேடு மலையடிவாரத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியை காண பொதுமக்கள் குவிந்தனர். போலீஸ் தடையை மீறி சிறுவர்கள், இளைஞர்கள் ஆனந்த குளியல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் வந்த நிவர் புயலால் கன மழை காரணமாக ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை சுற்று வட்டார மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு மலைகளில் இருந்து வழிந்தோடும் மழைநீர் ஊசூர் அடுத்த புலிமேடு மலையடிவாரத்தில் ஆர்ப்பரித்து கொட்டி நீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நீர் வீழ்ச்சியை காண புலிமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாக ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஞாயிறன்று அருவியில் குளிக்கும்போது, இருதரப்பு கிராம இளைஞர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பெருமாள் கோயில் அருகே போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு, நீர் வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், மதியத்திற்கு மேல் அங்கு போலீசார் இல்லாததாலும், பல்வேறு வழியாக ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை பார்க்க அங்கு குவிந்த பொதுமக்கள் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதனை சுற்று தலமாக்கி போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி, நீர்வீழ்ச்சியில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Crowds ,foothills ,dam ,Pulimedu , Dam
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...