×

நியூயார்க் மேயருக்கு கொரோனா :சீனாவை சாடிய அதிபர் டிரம்ப்

நியூயார்க்,:நியூயார்க் மேயருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சீனாவை சாடும் வகையில் அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், நியூயார்க் மேயர் ரூடி கியுலியானி, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு தொற்று அறிகுறி இருந்ததால், அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். தற்போது தொற்று உறுதியானதால் அவர் மருத்துவமனையில் ெதாடர் கண்காணிப்பில் உள்ளார்.

இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நியூயார்க் மேயர் ரூடி கியுலியானி, நியூயார்க் வரலாற்றில் மிகவும் முக்கியமான சிறந்த மேயராவார். அமெரிக்கா வரலாற்றில் தற்போது நடந்து முடிந்த மிக மோசமான தேர்தலை அம்பலப்படுத்த அயராது உழைத்து வருகிறார். சீன வைரஸ் (கொரோனா) தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் குணமடைய வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Corona ,Trump ,Mayor ,New York ,China , New York, Mayor, Corona, China, President Trump
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!