சூரப்பாவை விசாரிக்க குழு அமைத்தது நியாமற்றது; விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் கடிதம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிருப்தி தெரிவித்துள்ளார். குழு அமைத்தது நியாயமற்றது எனவும் விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கும் அதேபோல அரசுக்கும் இடையேயான மோதல் என்பது நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக சூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது,. அதன் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் உகாரில் எப்படி விசாரணை ஆணையம் அமைத்தது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் சூரப்பாவுக்கு எதிராக புகார்களும் கொடுக்கலாம் எனவும் அரசு விளம்பரப்படுத்திடாது. இந்த நிலையில் இந்த விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. இவ்வாறு சூரப்பா மீது விசாரணை ஆணையம் அமைத்ததற்கு கமல்ஹாசன் கூட கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது நியாயமற்றது எனவும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிருப்தி தெரிவித்துள்ளார். குழு அமைத்தது நியாயமற்றது எனவும் விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். துணைவேந்தரை விசாரிப்பதற்கான குழுவை தனக்கு தெரியாமல் அமைத்தது குறித்தும் ஆளுநர் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>