திருச்செந்தூரில் பாஜ வேல் யாத்திரை நிறைவு: ம.பி. முதல்வர் பங்கேற்பு

திருச்செந்தூர்: தமிழக பாஜ சார்பில் வேல் யாத்திரை கடந்த நவ.6ம் தேதி திருத்தணியில் தொடங்கியது. நிறைவு விழா நேற்று திருச்செந்தூரில் திருமண மண்டபத்தில் நடந்தது. பாஜ தலைவர் முருகன் தலைமை வகித்தார். தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜ இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், எம்ஜிஆர் மதிய உணவுத் திட்டத்தை தீட்டி உலகம் முழுவதும் பெயர் வாங்கியதை போல் வேளாண் பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயிக்கும் வகையில் சட்டத்தை மோடி இயற்றியுள்ளார். என்றார். பா.ஜ தலைவர் முருகன் பேசுகையில், தமிழகத்தில் பா.ஜ. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ. அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்றார். நடிகை குஷ்பு பேசுகையில், தமிழகத்தை சமீபத்தில் 2 புயல் தாக்கியது ஆனால் பாதிப்பு இல்லை. இதற்கு பா.ஜ. தலைவர் முருகன் நடத்திய வேல் யாத்திரை தான் காரணம் என்று மக்கள் நம்புவதாக கூறினார்.

Related Stories:

>