ஏசியில் புகுந்த நல்ல பாம்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. இயந்திரத்திற்குள் இருந்து “உஷ், உஷ்” என்று சத்தம் கேட்டது. மேலும், ஏசி மெஷினில் பாம்பின் வால் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த ரஞ்சித்குமார், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த வனத்துறையினர் கடைக்குள் இருந்த ஏ.சி.இயந்திரத்தை கழற்றி உள்ளே பார்த்தபோது சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு இருந்தது. வனத்துறையினர் அதனை லாவகமாக பிடித்து எடுத்துச் சென்றனர்.

Related Stories:

>