19 முறை தொடர்ந்து குலுங்கிய பூமி.. நிலநடுக்கத்தால் அதிர்ந்த குஜராத்..!

அகமதாபாத், :குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.42 மணி முதல் 3.46 மணி வரை ரிக்டர் அளவில் 1.7 முதல் 3.3 வரையில் 19 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொதுமக்களின் உடைமைகள் இழப்போ ஏற்படவில்லை. இருந்தும் மக்கள் விடிய விடிய அச்சத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி பீதியுடன் காணப்பட்டனர்.

இதுகுறித்து காந்திநகரில் செயல்படும் நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஎஸ்ஆர்) மூத்த அதிகாரி சுமர் சோப்ரா கூறுகையில், ‘இன்று குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, பருவமழையால் தூண்டப்பட்ட நில அதிர்வு. குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்குப் பிறகு இதுேபான்ற நிலநடுக்கம் ஏற்படும்.  தற்போது கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலாவின் கிழக்கு - வடகிழக்கு மையப்பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி 12 கி.மீ ஆழத்தில் இருந்து உணரப்பட்டது. கடந்த காலங்களில் போர்பந்தர் மற்றும் ஜாம்நகரில் இதுபோன்ற நிலஅதிர்வுகள் நடந்தன. ஆனால் தற்போது இவை குறைந்துவிட்டன. தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் கவலைப்பட ேதவையில்லை’ என்றார்.

Related Stories:

>