மகாத்மா காந்தியைக் கொன்ற மக்களுக்கு மேற்கு வங்கம் ஒருபோதும் தலைவணங்காது: மம்தா பானர்ஜி கொந்தளிப்பு.!!!

கொல்கத்தா: மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மக்களுக்கு மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது என மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது. இந்த முறை மேற்குவங்கத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர பாரதிய ஜனதா கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், மேற்குவங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி  பாஷ்சிம் மிட்னாபூரில் நடந்த பேரணியில் பங்கேற்று ஆவேசமாக பேசினார். மம்தா பானர்ஜி கூறுகையில், நாங்கள் எவ்வளவு வேலை செய்தாலும், எங்கள் கொள்கைகள் எப்போதும் மோசமானவை என்று பெயரிடப்படுகின்றன.  

ரஃபேல் மோசடி மோசமாக இல்லை, பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பான விவரங்களை வெளியிடாதது அவர்களுக்கு (பிஜேபி) மோசமானதல்ல, ஆனால் இங்கே அம்பன் புயல் பாதிப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட கணக்கு விவரங்களை கேட்கின்றனர். மகாத்மா காந்தியைக் கொன்ற மக்களுக்கு மேற்கு வங்கம் ஒருபோதும் தலை வணங்காது என்றும் ஆவேசமாக பேசினார். மேலும், தாஜ்பூரில் ஆழமான துறைமுகம் கட்ட மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ரூ .15,000 கோடி செலவில் கட்டப்பட்டு 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இது மாநிலத்தின் முதல் ஆழ்கடல் துறைமுகமாக இருக்கும் என்றார்.

Related Stories:

>