ஆன்மிக ஆட்சிக்கு அஞ்சியே புயல் வலுவிழந்தது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர் : நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகு, காலங்கள் மாறலாம் என்றும் கூட்டணி அமையலாம் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரஜினி காந்த் கட்சி தொடங்குவதில் பாஜக கட்சியின் அழுத்தமும் இல்லை என்றும் அவரே சுயமாக சிந்தித்து கட்சி தொடங்கி உள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ரஜினிகாந்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் காலங்கள் மாறலாம் என்றும் கூட்டணி அமையலாம் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் புயலின் தாக்கம் குறைய ஆன்மீக ஆட்சியே காரணம் என தெரிவித்த ராஜேந்திர பாலாஜி, தமிழகத்திற்கு தேவையான புயல் நிவாரணத்தை முதலமைச்சர் போராடி பெறுவார் என்றும் கூறியுள்ளார்.  விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற எந்த நடவடிக்கையையும் முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories:

>