×

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: புள்ளி விவரம் சேகரிக்க ஆணையம் அமைத்தது தமிழக அரசு..!

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான புள்ளி விவரம் சேகரிக்க தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது என்று அறிக்கை மூலம் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மூலம் தெரிவிப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதன், அடிப்படையிலும், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனை, எதிர்கொள்ளத் தேவையான புள்ளி விவரங்களை பெறுவதற்காகவும், தற்போதைய நிலவரப்படியான சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 1ம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விபரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அதன் அடிப்படையில் புள்ளி விபரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஹ.குலசேகரன் அவர்களின் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் அதன் பணியையும் துவக்கும். மேலும், சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கப்படும் என்று இந்த அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sativari ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,commission , Tamil Nadu, Sativari Survey, Commission, Government of Tamil Nadu
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...