×

தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை அட்டகாசம்; கிராம மக்கள் அச்சம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோட்டட்டி கிராமத்தில் நேற்று காலை ஒற்றை யானை புகுந்தது. அப்பகுதியில் உள்ள சாமந்தி தோட்டத்தில் புகுந்த யானையை விவசாயிகள் விரட்டியுள்ளனர்.

அதை தொடர்ந்து தக்காளி, பீன்ஸ், ராகி உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்த யானை, சாலையில் ஹாயாக நடந்து சென்றது. யானையை வேடிக்கை பார்க்க கிராம மக்கள் திரண்டனர். மேலும், அங்கு கூடிய இளைஞர்கள் ஆபத்தை உணராமல் யானையை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதையடுத்து, கோட்டட்டி கிராம பகுதியில் ஒற்றை யானை உலாவி வருவதை அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்று பேவநத்தம் வனப்பகுதிக்கு யானையை விரட்டினர். கிராம பகுதியில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dhenkanikottai , Single elephant
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு