×

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய மைல்கல் : பிரிட்டன் மக்களுக்கு நாளை முதல் தரப்படுகிறது பைசர் தடுப்பு மருந்து!!

லண்டன்: கொரோனா தடுப்பு மருந்தான பைசர்-பயோன்டெக் மருந்துக்கு உலகிலேயே முதல் நாடாக அனுமதி அளித்ததை அடுத்து நாளை முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குகிறது இங்கிலாந்து அரசு. கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும்  பணியில் பல்வேறு நாடுகளும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சில மருந்துகள் தயாரிக்கப்பட்டு பல கட்ட பரிசோதனைகள் நடது வருகின்றன. இதேபோல் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக்  நிறுவனம் இணைந்து பைசர் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தன. பல கட்ட ஆய்வுகளுக்கு பின் இந்த மருந்து 95 சதவீத செயல்திறனுடன் இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  

கடந்த சில தினங்களுக்கு முன், பைசர் மருந்து 95.5 சதவீத செயல் திறன் கொண்டது என அறிவித்த பைசர் நிறுவனம், இதன் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை இங்கிலாந்து அரசிடம் கேட்டிருப்பதாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பைசர் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளது. சுகாதாரம் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பைசர் மருந்து பயன்பாட்டுக்கான பரிந்துரையை இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் நாளை முதல் பைசர் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனிடையே பைசர் கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் வரும் வெள்ளிக்கிழமை முதலும் ஸ்விட்சர்லாந்தில் அடுத்த மாதமும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.


Tags : fight ,Fischer ,British , Corona, Milestone, UK, People Pfizer Prevention, Drug
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்