வாரத்தின் முதல் வர்த்தக நாளில் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 45,272 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை..!

மும்பை: மும்பை பங்குச் சந்தை புதிய சாதனை படைத்துள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் வெளியாவதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை காலை முதல் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1924 புள்ளிகள் உயர்ந்து 45,2722 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 45,272 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24 புள்ளிகள் அதிகரித்து 13,283 புள்ளிகளாக உள்ளது.

ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் முடிவில் பொருளாதார வளர்ச்சி -9.5 சதவீத அளவில் இருக்கும் என முன்பு கணித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி இன்றைய நாணய கொள்கையில் 2021ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது. இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கி இலக்கை விடவும் அதிகமாக இருக்கும் நிலையில் 2021 நிதியாண்டின் 3வது காலாண்டில் நுகர்வோர் பணவீக்கம் அளவீடு 6.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது. மேலும் ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் 1.66 %, சன் பார்மா பங்கு 1.28 %, விலை உயர்ந்தன. பார்த்தி ஏர்டெல் பங்கு 1.70 %, இந்துஸ்தான் யுனிலிவர் பங்கு 1.55 %, எஸ்.பி.ஐ பங்கு 0.21 % விலை அதிகரித்தது.

Related Stories:

>