சோதனை சாவடி அமைத்து வேல் யாத்திரை செல்லும் பாஜகவினரை தடுக்க நடவடிக்கை: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை ! ..

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வேல் யாத்திரை செல்ல முயலும் பாஜகவினரை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கடந்த நவம்பர் 6ம் தேதி சென்னையில் இருந்து திருத்தணிக்கு சென்ற பாஜக கட்சியினர் அங்கு வேல் யாத்திரையை தொடங்கினர். இந்நிலையில், நவம்பர் 6 ல் துவக்கி டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூரில் முடிக்க போவதாக முடிக்கப் போவதாக அறிவித்துள்ள இந்த யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி பல இடங்களில் அனுமதியின்றி யாத்திரையை பா.ஜ.கவினர் தொடர்ந்து நடத்திவருகின்றனர். இந்த நிலையில், திருச்செந்தூரில் பாஜகவின் வேல் யாத்திரை நிறைவு கூட்டத்தை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிறைவு நாள் கூட்டத்தில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பார் என பாஜக அறிவித்திருந்தது.

இதனையடுத்து, வேல் யாத்திரை செல்ல முயலும் பாஜகவினரை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி ஆகிய பகுதிகளில் பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>