×

பிரதமரின் வாரணாசி தொகுதியில் நடந்த உபி. சட்ட மேலவை தேர்தல் 2 இடங்களில் பாஜ தோல்வி: 10 ஆண்டுகளுக்குப் பிறகு சறுக்கல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிரதமரின் வாரணாசி மக்களவை தொகுதியில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் 2 தொகுதிகளில் பாஜ தோல்வியை தழுவியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காலியாக இருந்த 11 சட்ட மேலவை தொகுதிகளுக்கான எம்எல்சி தேர்தல் கடந்த செவ்வாயன்று நடைபெற்றது. 5 தொகுதிகள் பட்டதாரிகளுக்கும், 6 தொகுதிகள் ஆசிரியர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. பாஜ.வுடன் இணைந்து செயல்படும் ஆசிரியர்கள் சங்கம், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என 199 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த 11 இடங்களில் பாஜ 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி 3 இடங்களிலும், இரண்டு இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். வாரணாசி மண்டலத்தில் பட்டதாரி தொகுதியை சமாஜ்வாடி கட்சியின் அஸ்துதோஷ் சின்கா கைப்பற்றி உள்ளார். அதேபோல், ஆசிரியர் தொகுதியில் இக்கட்சியின் லால் பிகாரி யாதவ் வெற்றி பெற்றுள்ளார். இந்த 2 தொகுதிகளும் கடந்த பத்து ஆண்டுகளாக பாஜ.விடம் இருந்த நிலையில், சமாஜ்வாடி கட்சி அவற்றை கைப்பற்றி உள்ளது.

Tags : UP ,constituency ,Varanasi ,BJP ,by-elections , UP in the Prime Minister's Varanasi constituency. BJP loses 2 seats in by-elections: Sliding after 10 years
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை