×

சதம் விளாசினார் கேப்டன் ரகானே

சிட்னி: ஆஸ்திரேலியா ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணி கேப்டன் ரகானே சதம் விளாசினார். டிரம்மாய்ன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (3 நாள் ஆட்டம்), டாஸ் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, ஷுப்மான் கில் மற்றும் சாஹா டக் அவுட்டாகினர். புஜாரா 54 ரன் (140 பந்து, 5 பவுண்டரி), குல்தீப் 15, உமேஷ் 24 ரன் எடுத்தனர்.  ரகானே 108 ரன் (228 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்), சிராஜ் (0) களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Tags : Raghane , Captain Raghane scored a century
× RELATED ரகானே, புஜாராவுக்கு டிராவிட், கோஹ்லி...