சட்டப்பேரவையில் தலைவர்கள் படங்கள் வாசன் வரவேற்பு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள வ.உ.சிதம்பரனார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மற்றும் பரமசிவ சுப்பராயன் ஆகியோர் நாட்டிற்காக, தமிழகத்துக்காக பெரிதும் போற்றக்கூடிய வகையில் செயல்பட்ட மாபெரும் தலைவர்கள். இவர்களது படங்களை சட்டசபையில் வைக்க எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது, சிறப்பானது. தமிழக மக்களுக்காக, தமிழ்நாட்டுக்காக பாடுபட்ட, வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய உயர்ந்த தலைவர்களின் படங்களை சட்டசபையில் வைப்பது உண்மையிலேயே பெரிதும் பாராட்டுக்குரியது. தமிழக சட்டசபையில் வ.உ.சி., ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மற்றும் பரமசிவ சுப்பராயன் ஆகியோரது முழு திருவுருவப்படங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பதற்கு தமாகா சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories: