தமிழ் கல்வெட்டுகளுக்கான இயக்குநரகத்தை சென்னையில் அமைக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் கல்வெட்டுகளுக்கான இயக்குநரகத்தை சென்னையில் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் மைசூருக்கு சென்று தான் கல்வெட்டு படிகளை பார்வையிட முடியும் அல்லது மைசூரில் உள்ள அலுவலகத்திற்கு எழுதி அந்த படிகளை பெற்று தங்களது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், பல நேரங்களில் அக்கல்வெட்டு படிகளை பெற முடியாத அல்லது மிகத் தாமதமாக பெரும் நிலைமை உள்ளதால், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

ஏற்கனவே இந்த இயக்குநரகம் ஊட்டியில் செயல்பட்டு வந்தது. பின்னர் அது மைசூருக்கு மாற்றப்பட்டுள்ளதால் இந்த சிரமம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டு கல்வெட்டு படிகள் தமிழ்நாட்டிற்குள்ளேயே அமைத்து பாதுகாப்பது தான் ஆராய்ச்சி பணிக்கு பேருதவியாக இருக்கும். எனவே, மத்திய அரசு தமிழ்நாட்டு கல்வெட்டு படிகள் பராமரிப்பு மையத்தை சென்னையிலேயே அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>