தொடர் மழையால் கொடைக்கானல்-பழநி மலைச்சாலையில் மண்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

கொடைக்கானல்: தொடர் மழை காரணமாக கொடைக்கானல்-பழநி சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் புரெவி புய‌ல் கார‌ண‌மாக‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் தொடர்ந்து‌ ம‌ழை பெய்து வ‌ந்த‌து. தொட‌ர்ந்து ம‌ழை பெய்து வ‌ந்த‌தால் கொடைக்கான‌ல்-வ‌த்த‌லகுண்டு-ப‌ழ‌நி சாலைக‌ளில் வாக‌னங்க‌ளில் ப‌ய‌ணிக்க‌ த‌டை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடை விலக்கி கொள்ளப்பட்டு நேற்று போக்குவ‌ர‌த்து துவ‌ங்கிய‌து. நேற்றிரவு பர‌வ‌லாக‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் க‌ன‌மழை பெய்த‌தால் கொடைக்கான‌ல்-ப‌ழ‌நி பிர‌தான‌ சாலையில்‌ ச‌வ‌ரிக்காடு ப‌குதியில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் கொடைக்கானல்-பழநி சாலையில்  போக்குவ‌ர‌த்து துண்டிக்கப்பட்டுள்ளது. ம‌ண்ச‌ரிவை அக‌ற்றும் ப‌ணியில் நெடுஞ்சாலை துறையின‌ர் ஈடுப‌ட்டுள்ள‌ன‌ர். ம‌ழை நேர‌ங்க‌ளில் இதுபோன்ற ம‌ண்ச‌ரிவு இப்பகுதியில் வ‌ழ‌க்க‌மாகி வ‌ருகிற‌து. என‌வே சாலையை அக‌ல‌ப்ப‌டுத்தி ம‌ண்ச‌ரிவு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்  கோரிக்கை விடுத்துள்ள‌னர்.

Related Stories:

>