×

நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு சீனா: சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தின் ரோவர் நிலவின் மேற்பரப்பில் கொடியை நாட்டியது

பிஜீங்: அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக நிலவில் தங்கள் தேசிய கொடியை நாட்டிய இரண்டாவது என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. நிலவில் விண்கலத்தை அனுப்பி அங்குள்ள பாறைக்கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை  பூமிக்கு எடுத்து வந்து அய்வு செய்வதற்காக சீனா திட்டமிட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி சாங்க் இ -5 எனும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை சுமந்து சென்ற லேண்டர் நேற்று முன்தினம்  நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில் இந்த விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் உள்ள பாறை கற்களை சேகரிக்க தொடங்கியது. இந்நிலையில், சேஞ்ச் 5 விண்கலம் நேற்று (டிசம்பர் 4) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

அதன்பின் விண்கலத்தில் இருந்து வெளியே வந்த ரோவர் இயந்திரம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. அதன் முதல் நடவடிக்கையாக ரோவரில் சீன விண்வெளி விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டிருந்த சீன தேசிய கொடி நிலவின் மேற்பரப்பில் நாட்டப்பட்டது. இதன் மூலம், நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. நிலவில் தங்கள் நாட்டின் கொடி நாட்டப்பட்ட புகைப்படத்துடன், ரோவர் இயந்திரம் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய நேரப்படி கடந்த 2-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சுமார் 2 மீட்டர் ஆழத்திற்கு துளையிட்டு, விண்கலம் பாறைத் துகள்களை சேகரித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சேகரித்த மாதிரிகளுடன் விண்கலம் மீண்டும் பூமியை வந்தடையும். இதுவரை அறியப்படாத பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள பாறை துகள்களை இந்த விண்கலம் சேரித்து எடுத்து வரும். சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தால், நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்த மூன்றாவது நாடு என்ற பெயரை சீனா பெறும். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை நிலவின் மாதிரிகளை சேகரித்து எடுத்துவந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : China ,moon , China becomes second country to fly flag on moon: Change 5 unmanned spacecraft rover hoists flag on moon surface
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்