லாடபுரம் மயிலூற்று அருவியில் தண்ணீர் கொட்டுகிறது -பைக்கில் இளைஞர்கள் படையெடுப்பு

பெரம்பலூர்: மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான லாடபுரம் மயிலூற்று அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாகத் திகழும் பச்சைமயில் லாடபுரம் அருகே மயிலூற்று எனப்ப டும் அருவி ஒன்று உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த அருவியில் தற்போது புரெவி புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் தண் ணீர் கொட்ட ஆரம்பித்து முன் கூட்டியே சீசன் தொட ங்கியுள்ளது.

பெரம்பலூர் நகரிலிருந்து துறையூர் சாலையில், செஞ்சேரி, பாளையம், குரும்பலூர், ஈச் சம்பட்டி வழியாக லாடபுரம் சென்று,அங்கிருந்து பச்சை மலை அடிவாரத்திற்கு சரவ ணபுரம்வழியாக 3கிமீ தூர ம் சென்றால் இந்த மயிலூ ற்று அருவியை வந்தடைய லாம்.

தற்போது பச்சை மலையி ல் பெய்த கனமழை காரண மாக இந்த அருவியில் தண்ணீர் வரத்து காணப்படுவ தால் பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் அறிவியில் உல்லாச குளியல் போடுவ தற்காக பைக்குகளில் படை யெடுத்து வருகின்றனர். கு றிப்பாக லாடபுரத்திலிருந் து மலை அடிவாரத்திற்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூ ரமுள்ள சாலைமட்டும் தர மானதாக அமைக்கப்பட்டு இருந்தால் சுற்றுலாப் பய ணிகள்பெண்கள், குழந்தை கள் என குடும்பத்துடன் செ ன்று மகிழ்ந்து வர ஏதுவாக இருக்கும்.

எனவே இந்த வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஜனவரி வரை அருவியில் தண்ணீர் கொ ட்டும் வாய்ப்புகள் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோரையாறு அருவி, எட்டெருமைப்பாழி அருவி போன்ற பிரதான அருவிக ளுக்குச் செல்லும் பாதை மிகக் கடினமாக உள்ள நி லையில், மயிலூற்று அரு விக்கு அதிக சிரமம் இன்றி செல்ல ஏதுவாக வழிகள் உள்ளதால்அடிவாரம் வரை மட்டுமாவது சாலையை சீர மைத்துகொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: