×

கடலூரில் பெருமாள் ஏரியில் நீர்திறப்பு 19,000 கனஅடியாக அதிகரிப்பு: 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள பெருமாள் ஏரியிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீரால் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குள்ளஞ்சாவடி அருகேயுள்ள பெருமாள் ஏரியில் இருந்து நேற்று 12,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 19,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் கொளக்குடி, ஓணான்குப்பம், சிறுபாலையூர், அகரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீர் சூழ்ந்து தத்தளிக்கின்றன. 10,000 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 5 கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே ரப்பர் படகு மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Tags : villages ,Perumal Lake ,Cuddalore , Cuddalore, flood
× RELATED சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி...