வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

திட்டக்குடி :  தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வெலிங்டன் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சூறாவளி காற்றுடன் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்தேக்கத்தில் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வரத்து வாய்க்கால் மூலம் ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வெலிங்டன் நீர் தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 15 அடியாக உயர்ந்துள்ளது. வரத்து வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், மேலும் நீர்மட்டம் உயரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: