×

சேலத்தில் திமுக போராட்டத்துக்கு வரும் தொண்டர்கள், விவசாயிகள் நடுவழியில் போலீசால் தடுத்து நிறுத்தம்

சேலம்: டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். சேலத்தில் திமுக போராட்டத்துக்கு வரும் தொண்டர்கள், விவசாயிகள் நடுவழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். வேளாண் சட்டத்துக்கு எதிராக சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்துக்கு சேலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து வருபவர்களை போலீஸ் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓமலூர், அயோத்தியாபட்டினம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். ஓமலூரில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் திமுகவினர் நடந்தே ஸ்டாலின் போராட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். உடையாப்பட்டி எஸ்.ஆர்.பி.கிரிக்கெட் மைதானத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம் நடத்துகின்றனர்.

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டமானது திருச்சியில் அண்ணா சிலை அருகே தற்போது நடந்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டத்தில் ஒன்றிணைந்து நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Tags : Volunteers ,protest ,Salem ,DMK , DMK, farmers
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு