டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 96.08 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 36,652 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,08,211 ஆக உயர்ந்தது.
* புதிதாக 512 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,39,700 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,533 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 90,58,822 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,09,689 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 94.20% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.