சென்னையில் சிகிச்சை பெற்று வந்த லட்சதீவு துணை நிலை ஆளுநர் உயிரிழப்பு

சென்னை: நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சத்தீவின் துணை நிலை ஆளுநர் தினேஷ்வர் சர்மா  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லட்சத்தீவின் துணை நிலை ஆளுநராக இருந்தவர் தினேஷ்வர் சர்மா (66). நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 25ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் தினேஷ் சர்மாவின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.40 மணி அளவில் தினேஷ்வர் சர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

Related Stories:

>