×

முதல்வரிடம் வேலை வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக பணி ஆணை

சென்னை: முதல்வரிடம் வேலை வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொரோனா வைரஸ்  தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மதுரையில் இருந்து கார் மூலமாக சிவகங்கை சென்றார். அவரது வாகனம் மதுரை முக்கு இடத்திற்கு சென்றபோது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த  மஸ்தான் பாதுஷா கோரிக்கை மனுவுடன் சாலையோரம் காத்திருந்தார். இதைக்கண்ட முதல்வர் தனது காரை நிறுத்தி மாற்றுத்திறனாளியிடம் கோரிக்கையை கேட்டார். ‘நான் 2 கால்களும் ஊனமுற்ற மாற்றுதிறனாளி. பி.பி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ  படித்துள்ளேன். எனக்கு ஏதாவது ஒரு அரசு துறையில் பணி வழங்க வேண்டும்’ என அவர் கோரிக்கை வைத்தார்.

 இதையேற்று மாற்றுத்திறனாளி மஸ்தான் பாதுஷாவுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி பிரிவில் விவர உள்ளீட்டாளர் பணிக்கு நியமனம் செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் சிவகங்கை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணையை நேற்று வழங்கினார்.



Tags : transferee , Immediate work order for the transferee who has applied for the job to the Chief
× RELATED மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில்...