×

லா அரியர் தேர்வு கால அட்டவணை: சிண்டிகேட் முடிவு செய்து அறிவிக்கும்: ஐகோர்ட்டில் சட்ட பல்கலை. தகவல்

சென்னை: ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி  சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் செய்யக்கூடாது என்றும் ஆன்லைனிலோ, ஆப்லைனிலோ தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில் சட்டப் படிப்பிற்கான  அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அகில  இந்திய பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் அரியர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார்.   

இதைக்கேட்ட நீதிபதி அரியர் தேர்வு எப்போது நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் சட்டப் படிப்புகளுக்கான அரியர் தேர்வு  நடத்துவது தொடர்பான கால அட்டவணை குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : La ariyar Exam Timetable: Syndicate decided to announce: High Court University in the frame. Information
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100