பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: புரெவி புயலால் காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிகக்கடுமையான மழை பெய்திருக்கிறது.  ஒரு லட்சத்திற்கும்  கூடுதலான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் அழுகும் ஆபத்துள்ளது. மழையால் சேதமடைந்த பயிர்கள், வீடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து உடைமைகளுக்கும் இழப்பீடு வழங்கவும், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை  வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து விரைவாக நிதியுதவி பெற்று நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>