×

தென் இந்தியாவில் நாங்கள் கால் பதித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என குஷ்பு கருத்து தெரிவித்த சில நேரங்களிலேயே பாஜகவுக்கு பின்னடைவு

ஐதராபாத், :தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கு கடந்த 1ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 46.55 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 1,122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முறை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவியது.இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 31 வார்டுகளில் பாஜக முன்னிலையும், டிஆர்எஸ் 16 மற்றும் ஏஐஐஎம் 6 இடங்களில் முன்னணியில் இருந்தன. அச்சமயத்தில் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் நிலவரம் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகி குஷ்பு கருத்து தெரிவித்தார்.

அதில்,தெலுங்கானா மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஐதராபாத் தேர்தல் முடிவு
வெளிக்காட்டியுள்ளது. நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை. பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான நம்பிக்கையே தேர்தலில் பிரதிபலிக்கிறது. ஐதராபாத் மக்களுக்கு நன்றி.தென் இந்தியாவில் நாங்கள் கால் பதித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகளே அதற்கு சான்று. 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் மூலம் தமிழகத்திலும் காலடி எடுத்து வைப்போம் என்பதை சொல்லிக் கொள்கிறேன். பிரதமர் மோடி மற்றும் ஊழலற்ற அரசின் மீது தொர்ந்து நம்பிக்கை கொள்வோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.  

ஆனால் குஷ்புவின் கருத்து எதிர்மறையாக தேர்தலில் திடீரென பாஜக பின்னடைவை சந்தித்தது. வாக்கு எண்ணிக்கையின் மதியம் 1 மணி நிலவரப்படி 69 வார்டுகளில் டிஆர்எஸ், 39 இடங்களில் பாஜக மற்றும் ஏஐஐஎம் 32, காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.  நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை சற்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


Tags : Khushbu ,BJP ,South India , South India, Khushbu, BJP, regression
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...