×

கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை!!

சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், “தமிழகத்தில் இதுவரை 20 இடங்களில் மிக கன மழையும், 50 இடங்களில் கன மழையும் பதிவானது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% குறைவாக பெய்துள்ளது. நேற்று வரை 16 சதவீதம் வரை குறைவாக இருந்த நிலையில் ஒரே நாளில் 14 சதவீதம் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. மன்னார் வளைகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலையில் தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி கேரளாவை நோக்கி நகரும். தஞ்சலாய் இதனால் கடலூர்,நாகை, திருவாரூர் , ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிக கனமழை தொடரும்” என்றார் .

தொடர்ந்து பேசிய அவர், “தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், கரூர்,கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை சூறைக்காற்று வீசக்கூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 36 செ.மீ மழை பதிவாகியுள்ளது, என்றார். 


Tags : Cuddalore ,Nagaon ,districts ,Ramanathapuram ,Thiruvarur , Cuddalore, Nagai, Thiruvarur, Ramanathapuram
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...