×

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் இன்று களமிறங்குகிறார் தமிழகத்தின் நடராஜன்..!

டெல்லி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் தமிழக வீரர் நடராஜன் இன்று களமிறங்குகிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிடம் இருந்து தொப்பியை பெற்று கொண்டார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘யார்க்கர்’ பந்து வீச்சில் அசத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்துக்கான இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வானார். இந்திய அணிக்காக ஆடியது நம்ப முடியாத, புதுமையான அனுபவமாக இருந்தது என தமிழக வீரர் நடராஜன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Natarajan ,T20 matches ,Tamil Nadu ,Australia , Australia team, T20 match, Tamil Nadu player Natarajan, field
× RELATED தஞ்சாவூரில் மொபட் திருடியவர் கைது