ராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12மணி நேரத்தில் வலுவிழக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: ராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12மணி நேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கரையை கடக்காமலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கிறது. வங்கக்கடலில் 10 மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. காலை 08.30 மணி நிலவரப்படி மன்னர் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

Related Stories:

>