மேற்கு வங்க எல்லையில் மாடு கடத்தல் கும்பலை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

கொல்கத்தா: மேற்கு வங்க எல்லையில் மாடுகளை கடத்திய கும்பலுக்கும், எல்லை பாதுகாப்பு படைக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில், கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.மேற்கு வங்க மாநிலம், பெர்காம்பூர் மாவட்டத்தில் உள்ள சகார்பாரா சோதனை சாவடியில் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 60 மாடுகளுடன் சென்ற வாகனங்களை வீரர்கள் நிறுத்த சொன்னார்கள். அப்போது, 150 பேர் கொண்ட கடத்தல் கும்பல், துப்பாக்கியால் வீரர்களை நோக்கி சுட்டனர். கையெறி குண்டுகளை வீசினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அண்டை நாடான வங்கதேசத்துக்கு கடத்தப்பட இருந்த 60 கால்நடைகள் மீட்கப்பட்டன. இந்தாண்டு மட்டும் இதுவரை 6,224 கால்நடைகள் எல்லை பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வங்கதேசத்துக்கு நூற்றுக்கணக்கில் மாடுகள் கடத்தி செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>