ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் சென்னை கோட்டத்தின் வருவாய் 39% அதிகரிப்பு: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் 59 சரக்கு ரயில்களை இயக்கியுள்ளது. இதில் வாலாஜாபாத் ஆட்டோமொபைல் சரக்கு பணிமனை மூலமாக 23 ரயில்களும், மேல்பாக்கம் ஆட்டோ மொபைல் சரக்கு பணிமனை மூலமாக 36 ரயில்கள் என மொத்தம் 59 ரயில்கள் மூலமாக 12,158 கார்கள் சென்னையிலிருந்து நாடு முழுவதும் ஏற்றிச்செல்லப்பட்டன. இதுவே கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 44 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. வாலாஜாபாத் ஆட்டோமொபைல் சரக்கு பணிமனை மூலமாக 22 சரக்கு ரயில்களும், மேல்பாக்கம் ஆட்டோமொபைல் சரக்கு பணிமனை மூலமாக 22 ரயில்களும் இயக்கப்பட்டன. மொத்தம் 8350 கார்கள் இந்த 44 ரயில்கள் மூலமாக ஏற்றிச் செல்லப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒப்பிடும்போது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கார்கள் ஏற்றிச்சென்றதில் 46% மற்றும் ரயில்கள் இயக்கியதில் 34% வளர்ச்சி அதிகரித்துள்ளது.

Related Stories:

>