×

மகாசிவராத்திரியை முன்னிட்டு மயூரநாதர் ஆலயத்தில் 17ம் ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இரண்டாவது நாளாக நடைபெற்ற மயூர நாட்டியாஞ்சலி விழாவில் வெளிநாட்டு பரத கலைஞர்களின் நடனங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. மயிலாடுதுறையில் புகழ் பெற்ற மயூரநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியாஞ்சலி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாள் நிகழ்வில் மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை பெங்களுர் போன்ற நகரங்களில் இருந்தும் சிங்கப்பூர், அபுதாபி, நியூ ஜெர்சி, வியட்னாம் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பரத கலைஞர்கள் பங்கேற்றனர் . இவர்கள் நிகழ்த்திய ருத்ராஷ்டகம், ராகேஸ்வரி தரனா மற்றும் நாட்டிய நாடகமான வள்ளலார் அருட்பெரும் ஜோதி உள்ளிட்ட பல்வேறு நாட்டியங்கள் அரங்கேற்றப்பட்டன. இவற்றை திரளான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். …

The post மகாசிவராத்திரியை முன்னிட்டு மயூரநாதர் ஆலயத்தில் 17ம் ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Mahashivarathri ,Natyanjali festival ,Mayuranath temple ,Mayiladuthurai ,Mayura Natyanjali Festival ,Mayuranathurai Temple ,
× RELATED யூ டியூப்பில் பிரபலமாக்குவதாக கூறி...