×

தலமலை வனப்பகுதியில் பகலில் சாலையை கடந்த சிறுத்தை வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை வனப்பகுதியில் நேற்று பகலில் சாலையை கடந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தலமலை வனப்பகுதியில் புலி மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. திம்பம் மலை உச்சியில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக தலமலை செல்லும் வனச்சாலையில் அவ்வப்போது சிறுத்தைகள் மற்றும் புலிகள் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று தலமலை சாலையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த 4 பேர் தாளவாடி செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது ராமரணை வனப்பகுதி அருகே சாலையோரத்தில் சிறுத்தை நடமாடியதைக்கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு வாகனத்தை நிறுத்தினர்.

சாலையில் வாகனம் வருவதைக் கண்ட சிறுத்தை மெதுவாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள்  சென்று மறைந்தது. இந்த காட்சியை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். சிறுத்தை பகல் நேரத்தில் சாலையை கடந்து சென்ற தகவலறிந்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags : leopard motorists ,road ,forest ,Thalamalai , Leopard motorists cross the road during the day in the Thalamalai forest
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...