திருச்சுழி அருகே 9ம் நூற்றாண்டு மகாவீரர் கற்சிலை கண்டுபிடிப்பு

திருச்சுழி: திருச்சுழி அருகே ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது கீழ்இடையங்குளம் கிராமம். இங்கு கண்மாய் அருகிலுள்ள தனியார் வயலில் புதைந்த நிலையில் இருந்த சிலையை கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த விருதுநகர் கலெக்டர் கண்ணன் கற்சிலை குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தினார். இதனடிப்படையில் பாண்டிய நாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் கற்சிலையை ஆய்வு செய்தார்.  

பின் அவர் கூறுகையில், ‘இந்த கற்சிலை 9வது நூற்றாண்டை சேர்ந்ததாகும். இந்த பகுதியில் சமணம் மிக செழிப்பாக இருந்ததை இந்த சிலை உணர்த்துகிறது. இந்த சிலை சமணர்களின் 24வது தீர்த்தங்கரான மகாவீரரின் சிலையாகும்’ என்றார்.

Related Stories:

More
>