×

பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்; குமரிக்கு 230 கி.மீ தொலைவில் புரெவி புயல்: தென் மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை

டெல்லி: பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என இந்திய வானி்லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 230 கி.மீ. தொலைவில் புரெவி புயல் உள்ளதாகவும் கூறியுள்ளது. கரையை நோக்கி மணிக்கு 16 கீ.மீ. வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது. தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளான பாம்பன்-கன்னியாகுமரி இடையே இன்றிரவு அல்லது நாளை அதிகாலை புரெவி புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் பாம்பன் பகுதியை கடந்து  செல்லும் போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசு வாய்ப்பு உள்ளதாக  கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது 70-80 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக் கூடும். நாளை கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் கூறியுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரம், தென்கேரளக் கடலோரம் ஆகிய பகுதிகளில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.


Tags : storm ,Pamplona ,Puruvi ,Kumari ,districts , To Pamplona, near, Purevi storm, pouring, heavy rain
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...