×

தமிழகத்தில் கரையை கடக்கும் புரெவி புயல்: ஒகி புயலை விட வலுவானதா?

சென்னை: தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒகி புயலுக்கம் கரையை கடக்க உள்ள புரெவி புயலுக்கம் உள்ள வேறுபாடுகள் என்னென்னெ? வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கையை கடந்து தென் தமிழகத்திலும் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் புயல் என்று கூறினாலே அனைவரின் கவனத்திற்கு வருவது ஒகி புயல் தான். 2017-ம் ஆண்டு கரையை உரசிச் சென்ற இந்த ஒகி புயலானது பெரிய அளவிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தியது.

ஒகி புயல் Vs புரெவி புயல்
* ஒகி புயலை பொறுத்தவரை தெற்கு இலங்கையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக பகுதியை உரசி குஜராத்தில் கரையை கடந்தது.

* புரெவி புயலை பொறுத்தவரை தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி மெல்ல மெல்ல நகர்ந்து இலங்கையை கடந்து கன்னியாகுமரியில் கரையை கடக்க உள்ளது.

* ஒகி புயலை பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், தீவிர புயல், அதிதீவிர புயலாக மாறியது.  

* புரெவி புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உள்ளது.  

* காற்றின் வேகம் ஒகி புயலுக்கு அதிகபட்சமாக 155 கி.மீ. வரை காற்று வீசியது.

* ஆனால் புரெவி புயல் புயலாகவே உள்ளதால் அதிகபட்சமாக 100 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ஒகி புயலை பொறுத்தவரை அது புயலாக இல்லை; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தென் தமிழக, தென் கடலோர பகுதிகளை உரசி சென்றது.

* ஆனால் புரெவி புயல் புயலாகவே கரையை கடக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

* ஒகி புயலை பொறுத்தவரை அதிக நேரம் கடலில் பயணம் செய்தது. அதாவது குமரி கடலில் தொடங்கி, அதன்பிறகு அரபிக்கடலில் பயணம் செய்தது. கிட்டதட்ட 2000 கி.மீ. -ருக்கு மேலாக கடலிலேயே பயணித்து குஜராத்தில் கரையை கடந்தது.

* புரெவி புயலை பொறுத்தவரை இலங்கை, தென் தமிழகம் என 2 இடங்களில் கரையை கடக்க உள்ளது.

* ஒகி புயல் தமிழகத்தில் நேரடியாக கரையை கடக்கவிலை உரசிச் சென்றது.

* புரெவி புயல் நேரடியாக தமிழகத்தில் கரையை கடக்க உள்ளது.

தற்போது புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில்  ஒகி புயல் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்துமா? மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என புயல் முழுமையாக கரையை கடந்த பிறகு தான் தெரிய வரும்


Tags : storm ,coast ,Tamil Nadu ,Oki , Purivi storm crossing the coast in Tamil Nadu: Is Purivi stronger than Oki storm?
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...