×

கரை திரும்பாத மீனவர்கள் குறித்து அதிகாரிகள் முரண்பட்ட கருத்து: மீனவர்கள் பாதுகாப்பாக இருந்தால் ஏன் எங்களை தொடர்பு கொள்ளவில்லை?... உறவினர்கள் கேள்வி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு புரெவி புயல் குறித்து முறையாக தகவல் அளிக்கவில்லை என மீனவர்களின் உறவினர்கள் குற்றம் சாடியுள்ளனர். புரெவி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரபிக்கடலில் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு புயல் குறித்து முறையாக தகவல் அளிக்கவில்லை என மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் 14 படகுகளுக்கு தகவல் கொடுக்க இயலவில்லை எனவும் அதேபோல கண்காணிப்பு அதிகாரியான ஜோதி நிர்மலா 24 படகுகளுக்கு இன்னும் தகவல் சென்று சேரவில்லை எனவும் தெரிவித்தார். இதேபோன்று நேற்று இரவு மீனவளத்துறை இயக்குனர் கூறுகையில்; 124 படகுகள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், அது இன்றைய தினம் காலையில் அனைத்து துறைமுகங்களிலும் கரையேறும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்த முரண்பட்ட கருத்துக்கள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.  

தொடர்ச்சியாக அதிகாரிகள் தரப்பில் அனைத்து மீனவர்களுக்கு உரிய தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தகவல் சென்று சேரவில்லை என்று மீனவர்களின் உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பாக இருந்தால் ஏன் எங்களை தொடர்பு கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Tags : fishermen , Controversial opinion of the authorities about the fishermen who did not return to shore: Why did not they contact us if the fishermen were safe?
× RELATED இலங்கை சிறையிலிருந்து...