×

பிரதமர் மோடியின் அழைப்பு ஏற்பு: 72-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

டெல்லி: குடியரசு தினவிழாவின் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்கிறார். இந்தியாவில் 72-வது குடியரசு தின விழாவில் நாடு முழுவதும் வரும் 2021- ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட்டவுள்ளது. இதை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. 72-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றுகிறார்.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசி வழியே உரையாடியபோது, அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக் கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூரக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. விழாவில் பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

கடந்த 71-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் பங்கேற்கேற்றார். கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுக்கு உலகத் தலைவர்கள் யாரும் வருகை தரவில்லை. கொரோனா தொற்று பரவல் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு வரும் முதல் வெளிநாட்டு தலைவர் போரிஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,celebrations ,United Kingdom ,Boris Johnson ,guest ,Republic Day , Prime Minister Modi's invitation: UK Prime Minister Boris Johnson attends the 72nd Republic Day celebrations as a special guest
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...