×

கொட்டும் மழை.. கொந்தளிக்கும் கடல்.. மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் பாம்பன் - குமரி இடையே நாளை கரையை கடக்கிறது புரெவி புயல்!!

சென்னை : பாம்பனுக்கும் குமரிக்கும் இடையே புரெவி புயல் நாளை கரையைக் கடக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாலச்சந்திரன், புரெவி புயல் நேற்று இரவு இலங்கையின் கிழக்குப்பகுதியில், திரிகோண மலைக்கு வடக்கே கரையை கடந்தது.தற்போது, மன்னாரில் மையம் கொண்டுள்ளது.பாம்பனில் இருந்து 40 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கிமீ வேகத்தில் [பாம்பனை நெருங்கி வருகிறது. இந்த புயல் பாம்பனுக்கும் குமரிக்கும் இடையே புரெவி புயல் நாளை கரையைக் கடக்கும்.

இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். இதன் காரணமாக இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக் கூடும். நாளை கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரம், தென்கேரளக் கடலோரம் ஆகிய பகுதிகளில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.காரைக்காலில் 16 சென்டிமீட்டரும், தலைஞாயிறு, திருப்பூண்டி ஆகிய இடங்களில் 15 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினத்தில் 14 சென்டிமீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 13 சென்டிமீட்டரும், மயிலாடுதுறை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 12 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது, என்றார்.   


Tags : sea ,storm ,Kumari ,border ,Pamban , Hurricane, Pamban, Kumari, Purevi storm
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!