×

மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிப்பு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் கனடாவில் கார் பேரணி

கனடா: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய வம்சாவளியினர் கனடாவில் கார் பேரணி நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கனடாவிலும் இந்திய வம்சாளியைச் சேர்ந்தவர்கள் பஞ்சாப், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக கார் பேரணி நடத்தி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை இந்த பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கார்கள் மற்றும் டிரக்குகளில் கோரிக்கை பதாகைகள் மற்றும் கனடா கொடிகளை கட்டியபடி சென்றனர். ஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் ஆழமான உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டிருப்பதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


Tags : Car rally ,Indian ,government ,Canada ,Delhi ,protest , In Delhi, in support of farmers, in Canada, car rally
× RELATED விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி...