தேவாரம் மலையடிவாரத்தில் 13 பேரை கொன்ற மக்னா யானை உலா

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தில் ஒட்டி உள்ள தோட்டத்தில் 13 பேரை கொன்ற மக்னா யானை உலா வருவதால் விவசாயிகள், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தேவாரம் மலையடிவாரத்தில் ஒற்றையாக திரியும் மக்னா யானை இதுவரை 13 தோட்ட தொழிலாளர்களை அடித்து கொன்றுள்ளது. இதனை பிடித்து நீலகிரி வனப்பகுதிக்கு அனுப்ப வேண்டும் என தேவாரம் விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தி விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று தேவாரம் கோயில் காடு என்ற இடத்தில் உள்ள தனியார் தோட்ட பகுதியில் மக்னா யானை உலா வந்தது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையே மிகவும் ஆபத்தான இந்த யானையை ஆடுமேய்க்க சென்ற சிலர் மிக தைரியமாக  செல்போனில் போட்டோ எடுத்துள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவலறிந்ததும் தேவாரம் வனத்துறையினர் உடனடியாக சென்று பட்டாசுகளை போட்டு அடர்ந்த காட்டிற்குள் மக்னாவை விரட்டி வருகின்றனர்.

Related Stories: