ஏற்காடு மான் பூங்கா, முட்டல் நீர் வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்

சேலம்: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏற்காடு மான் பூங்கா, கரடியூர் வியூ பாயின்ட், ஆனைவாரி முட்டல் ஏரி போன்றவை நேற்று திறக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி, மாதந்தோறும், சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து வந்துள்ளனர். தற்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் பெருமளவு குறைந்திருப்பதால், ஊரடங்கு தளர்வு அதிகளவு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 10ம் தேதியில் இருந்து தியேட்டர்களும், வன உயிரியல், பொழுது போக்கு பூங்காக்கள் திறக்கப்பட்டது.

கடந்த மாதம் ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது சேலத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களும் திறக்கப்பட்டது. மேலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏற்காடு மான் பூங்கா, கரடியூர் வியூ பாயின்ட், ஆத்தூர் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி ஆகியவை தற்போது திறக்கப்பட்டது.

இதையடுத்து, ஏற்காடு மான்பூங்கா, கரடியூர் வியூ பாயின்ட் மற்றும் ஆத்தூர் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர். முட்டல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்தும், ஏரியில் படகு சவாரியும் செய்து பொழுதை கழித்து வருகின்றனர்.

Related Stories:

>