அடுத்தவாரம் பிரசாரம் காஷ்மீர் கவுன்சிலர் தேர்தலில் கம்பீரை களமிறக்கும் பாஜ

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் கட்சிக்காக அடுத்த வாரம்  பிரச்சாரம் செய்வார் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் பாஜ கட்சியில் சேர்ந்த கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது பிரபலத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

தற்போது ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதற்காக பாஜ கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கம்பீர் அடுத்த வாரம் பிரசாரம் செய்வார் என கட்சி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோன்ற, அடுத்த ஆண்டு நடைபெறும் கொல்கத்தா சட்டப்பேரவை தேர்தலிலும் கம்பீரை பிரசாரத்திற்கு பயன்படுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு, ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போது ஒரு சில கட்சி வேட்பாளர்களுக்காக கம்பீர் பிரச்சாரம் செய்திருந்தார். இதில் முன்னாள் ஹாக்கி நட்சத்திரம் சந்தீப் சிங் அடங்குவார்.

Related Stories:

>