×

ஏழைகளுக்கு உதவும் வகையில் மத வழிபாட்டு தலங்களில் முக கவச வங்கி வேண்டும்: என்எம்சி மேயர் ஜெய்பிரகாஷ் கடிதம்

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு முககவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவிட்டது. குறிப்பாக, முககவசம் அணியாவிட்ட்டால் அபராதமாக ₹500 வசூலிக்கப்பட்டது. இந்த அபராதத்தொகையை ரூ.2,000 அக உயர்த்தி ஆம் ஆத்மி அரசு சமீபத்தில் உத்தரவி பிறப்பித்தது. இதையடுத்து மக்களுக்கு உதவும் வகையில் பாஜ தலைமையிலான வடக்கு மாநகராட்சியின் சார்பில், பல்வேறு இடஙகளில் பேஸ்மாஸ்க் வங்கியை அமைத்து வருகிறது. இதில், ஏழை மக்கள் இலவசமாக முககவசங்களை பெற்று பயன்படுத்தலாம். இந்நிலையில், பேஸ்மாஸ்க் வங்கி அமைப்பதற்கு ஆதரவு கேட்டு பல்வேறு மத அமைப்புகளுக்கு மேயர் ஜெய் பிரகாஷ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றி மேயர் கூறுகையில், “இன்று, நான் பல்வேறு மத அமைப்புகளுக்கு, முககவச வங்கிகளை அமைப்பது குறித்து ஒரு கடிதம் எழுதினேன். இந்த பேஸ் மாஸ்க் வங்கியிலிருந்து எந்தவொரு ஏழை நபரும் ஒரு முககவசத்தை இலவசமாக எடுத்துக்கொள்ள முடியும். இதனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும்” என்றார். மேலும், இந்திரபிரஸ்தா சஞ்சிவனி தன்னார்வ தொண்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமை என்டிஎம்சியின் பேஸ்மாஸ்க் வங்கிக்கு 2,000 முககவசங்களையும் மற்றும் 100 பிபிஇ உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கியது. எதிர்காலத்தில், முககவச வங்கியில் இருந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இவற்றை நன்கொடையாக வழங்க முடியும். மேலும், மிகவும் தேவைப்படுபவர்களுக்கு பிபிஇ கருவிகள் வழங்கப்படும்” என்றும் கூறினார்.


Tags : face shield bank ,Jaiprakash ,places ,poor ,NMC , NMC mayor Jaiprakash's letter
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...