×

புரெவி புயலால் கனமழை கேரளாவுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: புரெவி புயல் காரணமாக கேரளாவில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தென்கிழக்கு  வங்கக்கடலின் உள்பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை ‘புரெவி’ புயலாக  உருவெடுத்து இருக்கிறது.  இதனால் கேரளாவின் தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்ைக  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று திருவனந்தபுரம்,  கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது.  ஆகவே இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. கோட்டயம்,  இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு  உள்ளது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்வது   முற்றிலும் தடைசெய்யப்பட்டு உள்ளது. இதேபோல் கடலில் மீன்  பிடிக்க சென்றவர்கள் உடனே  கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூறாவளி காற்று, பலத்த மழை  பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆங்காங்கே நிவாரண முகாம்களை  அமைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் தங்கி  உள்ளவர்கள்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடமாற்றம் செய்யப்பட்டு  வருகின்றனர். மழை தீவிரமடைந்தால் மலைப்பகுதிகளுக்கு இரவு போக்குவரத்தும்  தடைசெய்யப்படும்.  மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், வருவாய், காவல்துறை,   உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, மீன்வளம், நீர்ப்பாசனம், மின்சார  துறைகள் பேரழிவு மேலாண்மை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

யாரும் வெளியே வரவேண்டாம்
புரெவி புயலால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை ெபய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.  20 பேர் அடங்கிய தேசிய ேபரிடர் மீட்பு படையினர் திருவனந்தபுரம் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தயார் நிலையில் உள்ளனர். அடுத்த அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் நவ்ஜோத்சிங் கோசா அறிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala , Red alert for heavy rains in Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...