×

பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையின் போது, காற்றின் தரம் மோசமாக உள்ள அனைத்து நகரங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த தடை நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,  தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பசுமைப் பட்டாசுகளை இரவு 11.55 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி  வரை மட்டும் வெடிக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : During the Deepavali festival, the National Green Tribunal ordered a ban on fireworks in all cities where air quality is poor.
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...