×

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு சிபிஐ, அமலாக்கத்துறை மீது டெல்லி நீதிமன்றம் அதிருப்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2006ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த போது, அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதி பெறாமல், ஏர்செல் நிறுவனம் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம்  இருந்து ரூ.3,500 கோடி முதலீடு பெற உதவினார். இதற்கு கைமாறாக, அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணையை  தாமதப்படுத்துவதற்கு கடும்  அதிருப்தி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறையினர், ‘‘வெளிநாடுகளில் இருந்து ஆவணங்களை பெறுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அவை தற்போதுமுடியும் தருவாய் உள்ளது’’ என்று கூறினர். இதையடுத்து, விசாரணையை விரைந்து முடிக்க 2   மாதம் அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.



Tags : Aircel ,CBI ,Maxis ,Delhi , Aircel - Maxis case: CBI, Delhi court dissatisfied with enforcement
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...